நானும் இயக்கத்தில்
எனது கட்சியில் அனுபவம் ம.ஜ.இ.காவும் நானும் என் பள்ளி நாட்களில் தின செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் ஆசிரியர் தூண்டுவார்,அதன் காரணமாக பள்ளிக்கு அருகாமையில் இருந்த டீ கடைக்கு போய் பத்திரிக்கை வாசிக்க பழக்க படுத்தி கொண்டேன், அங்கேதான் என் அரசியல் பயிலகமாக இருந்தது. அங்கு இரட்டை குவளை முறை ஒழிந்து நக்சல்பாரிகளின் செய்திகளை தனியே ஒரு அட்டையில் ஒட்டும் பணி என்னை ஈர்த்தது, தின நிகழ்வுகளோ அல்லது அரசின் கொடுமைகளை நக்சல்பாரி புரட்சியாளர்களின் மீதான தாக்குதல் மேலும் நக்சல்பாரி புரட்சியாளர்களின் கையில் எழுதபட்ட பிரதிகளையும் அங்கே காண முடியும், பின்னர் அரசு படைகளால் ஆங்காங்கே பல தோழர்கள் கொல்லபட்டதை அங்கே தனியாக எடுத்து ஒட்டி வைப்பார், அவர்களின்...