Posts

Showing posts with the label விவாதிக்க

நானும் இயக்கத்தில்

  எனது கட்சியில் அனுபவம் ம.ஜ.இ.காவும் நானும் என் பள்ளி நாட்களில் தின செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் ஆசிரியர் தூண்டுவார்,அதன் காரணமாக பள்ளிக்கு அருகாமையில் இருந்த டீ கடைக்கு போய் பத்திரிக்கை வாசிக்க பழக்க படுத்தி கொண்டேன், அங்கேதான் என் அரசியல் பயிலகமாக இருந்தது. அங்கு இரட்டை குவளை முறை ஒழிந்து நக்சல்பாரிகளின் செய்திகளை தனியே ஒரு அட்டையில் ஒட்டும் பணி என்னை ஈர்த்தது, தின நிகழ்வுகளோ அல்லது அரசின் கொடுமைகளை நக்சல்பாரி புரட்சியாளர்களின் மீதான தாக்குதல் மேலும் நக்சல்பாரி புரட்சியாளர்களின் கையில் எழுதபட்ட பிரதிகளையும் அங்கே காண முடியும், பின்னர் அரசு படைகளால் ஆங்காங்கே பல தோழர்கள் கொல்லபட்டதை அங்கே தனியாக எடுத்து ஒட்டி வைப்பார், அவர்களின்...

இன்றைய விவாதம்

Image
  Ravindran  is with  Vchinnadurai Durai  and  19 others . 14h    ·  முரண்பாடு அனைத்தையும் தழுவியது. ஒரு அமைப்பில் குறை நிறை இரண்டும் இருக்கும். ஆனால் ஒரு அமைப்பின் மீது வெறுப்பு கொண்டு அதனிடத்தில் குறை மட்டுமே உள்ளது என்று வாதிடுவது நமது குறையை அறிந்துகொண்டு களையப் பயன்படாது. மேலும் நமது கடந்தகால சிறப்புத் தன்மையை மேலும் வளர்க்க வேண்டும் என்பதை மறுப்பதாகும். மேலும் குறைகளை களைவதற்கான வழிமுறைகளையும் நாம் சொல்ல வேண்டும். அதுதான் நாம் படிப்பினை பெற்று வளர்வதற்கு பயன்படும் விமர்சன முறையாகும். மேலும் தவறு என்று தெரியும் போது கோப்ப்படுவது அவசியமே ஆகும். அவ்வாறு கோப்ப்படாமல் இருப்பது குட்டிமுதலாளித்துவ சமரசமே ஆகும். தாராளியம் பற்றிய மாவோவின் கட்டுரையைப் படியுங்கள் புரியும். தவறுகளை எதிர்த்துக் கோபம் கொண்டு போராடாமல் இருப்பது தாராளியம் என்கிறார் மாவோ. இங்கு யாரும் மார்க்சிய லெனினியப் பார்வையில் சிறந்த கட்சியை உருவாக்கவில்லை என்றால் நமது கடந்தகால வரலாற்றில் நமது சிறப்புப் பணியையும் தவறுகளையும் பகுத்து ஆராய வேண்டும். ஆனால் இங்கு சிலர் எம்எல் கட்சி செய்ததெல...