பெண்கள் பற்றி பெண்கள்
புரியாத புதிர் என்று ஒரு படம் . அதில் ரகுவரன் முதலிரவில் தன் மனைவி 'React ' செய்யும் விதத்தை வைத்து , அவர் ஏற்கனவே 'Experience ' ஆனவர் என்கிற பிம்பத்தை மனதில் உருவாக்கி வைத்து கொள்வார் . அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மனைவியை சந்தேகித்து சித்ரவதை செய்து என்று படத்தின் போக்கு இருக்கும் . ரகுவரனின் கதாபாத்திரத்தை போலவே பெரும்பாலான இந்திய ஆண்களுக்கு தனக்கு வரப்போகும் மனைவி 'Virgin ' ஆ இல்லையா என்கின்ற மாபரும் குழப்பம் இருக்கிறது . இந்த விஷயத்தை கண்டு பிடிக்க இவர்கள் கையாளும் வழிகள் விசித்திரமானவை , உண்மைக்கு துளியும் சம்பந்தம் இல்லாதவை . இந்த வழிகள் செவி வழி செய்தியாக அவர்களுக்கு பகிரப் பட்டவை , இந்த வழிகள் ஆண்களின் மூளைக்குள்ளேயே உதித்து அவர்களுக்குள்ளேயே சரக்கு பார்ட்டிகளில் , ஆபிஸ் சிகரெட்டு இடைவேளைகளில் , வாட்ஸாப் குரூப்களிலும் சிரிப்பும் கும்மாளமுமாக பகிரப் பட்டவை . "மச்சான் அவ மூக்கு பெருசா இருந்தா அவளோட. ......... பெருசா இருக்கும் " " அவ கீழ் உதடு பெருசா இருந்த அவளுக்கு மேட்டர் ல Interest ஜாஸ்தி மச்சான் " " மாப்ள... மேக் அப் போடற பொண...