பெண்கள் பற்றி பெண்கள்

 புரியாத புதிர் என்று ஒரு படம் .

அதில் ரகுவரன் முதலிரவில் தன் மனைவி 'React ' செய்யும் விதத்தை வைத்து , அவர் ஏற்கனவே 'Experience ' ஆனவர் என்கிற பிம்பத்தை மனதில் உருவாக்கி வைத்து கொள்வார் . அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மனைவியை சந்தேகித்து சித்ரவதை செய்து என்று படத்தின் போக்கு இருக்கும் . ரகுவரனின் கதாபாத்திரத்தை போலவே பெரும்பாலான இந்திய ஆண்களுக்கு தனக்கு வரப்போகும் மனைவி 'Virgin ' ஆ இல்லையா என்கின்ற மாபரும் குழப்பம் இருக்கிறது . இந்த விஷயத்தை கண்டு பிடிக்க இவர்கள் கையாளும் வழிகள் விசித்திரமானவை , உண்மைக்கு துளியும் சம்பந்தம் இல்லாதவை .
இந்த வழிகள் செவி வழி செய்தியாக அவர்களுக்கு பகிரப் பட்டவை , இந்த வழிகள் ஆண்களின் மூளைக்குள்ளேயே உதித்து அவர்களுக்குள்ளேயே சரக்கு பார்ட்டிகளில் , ஆபிஸ் சிகரெட்டு இடைவேளைகளில் , வாட்ஸாப் குரூப்களிலும் சிரிப்பும் கும்மாளமுமாக பகிரப் பட்டவை .
"மச்சான் அவ மூக்கு பெருசா இருந்தா அவளோட. ......... பெருசா இருக்கும் "
" அவ கீழ் உதடு பெருசா இருந்த அவளுக்கு மேட்டர் ல Interest ஜாஸ்தி மச்சான் "
" மாப்ள... மேக் அப் போடற பொண்ணுங்க எல்லாம் ஐட்டம் டா ... So ... மேக் அப் போடாத பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கடா "
போன்றவை இவர்களின் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் . லூசு பயலுக.
இவர்களின் இன்றைய ஒழுக்க ஆராய்ச்சிகளின் நவீன வடிவம்தான் பெண்களின் கன்னித் தன்மையை பற்றி
வெளி வரும் மீம்கள் . இன்றைய ஆராய்ச்சி இளைஞனுக்கு இந்த மீம்ஸுகள் தான் கையேடுகளாக உபயோகப் படுகின்றன .
இவர்களின் இந்த ஆராய்ச்சிகளையும்
, பிரகடனங்களையும் பார்த்து விட்டு சும்மா சிரித்து விட்டு சென்று விட முடியாது . இந்தியாவில் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி. ஏன் தெரியுமா ? இங்கே பெண்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது...
இதில் முக்கியமாக கைம்பெண்கள், மற்றும் விவாகரத்தான பெண்களின் வாழ்க்கை இன்னும் பல்லிளித்து கொண்டுதான் இருக்கிறது . 1856 ஆண்டு பண்டிதர் ஈஸ்வர சந்திரா வித்யாசாகர் அவர்கள் ஆங்கிலேயர்கள் துணையோடு 'கைப்பெண்கள் மறுமண சட்டத்தை ' கொண்டு வந்ததுடன் இவர்களுக்கு சட்ட ரீதியாய் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்தன .ஆனால் சமூக பிரச்சனைகள் , சமூக இழுக்குகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .
என்னதான் திருமணம் என்பது கட்டாயம் என்கிற நிலை மாறி அது பெண்களுக்கு 'Lifestyle Choice ' ஆக ஆகி இருந்தாலும் திருமணத்தில் நாட்டமுள்ள பெண்களுக்கு மறுமணம் என்பது இந்த நாட்டில் இன்றும் கூட ஒரு கசப்பான அனுபவமாய் தான் இருக்கிறது என்பது நிதர்சனம் . அதற்கு முக்கிய காரணம் அவர்களின் 'Sexual Status /பாலியல் தகுதி '.
கைம்பெண்களுக்கும் , விவாகரத்து ஆனவர்களுக்கு இந்த சமூகம் வைத்த செல்ல பெயர் 'Used Piece ' 'Second Hand'. ஆண்களுக்கு இத்தகைய பெயர்கள் இல்லை ஏனென்றால் அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் .. .
பெரும்பாலானவர்களிடம் பெண் பார்க்கும் படலத்தில் ஆண்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்வி 'Are You A Virgin? ', 'Was it just oral sex ', How many times you had sex ' 'விவாகரத்துக்கு அப்பறமா Sex மூட் வந்து இருக்குமே , இவ்ளோ நாள் தனியா எப்படி மேனேஜ் பண்ண ' . இதில் மிகவும் அற்புதமான விஷயம் என்ன வென்றால் அந்த பக்கத்தில் இருந்து கேள்வி கேட்ட ஆண்கள் பலருக்கும் அது மறுமணம் . நீங்கள்லாம் வாயை திறந்து பேசலாமாடா.
இன்னும் சொல்லப் போனால் மேட்ரிமோனி இணைய தளங்களில் மறுமணம் பதிவு செய்திருக்கும் ஆண்கள் பெரும்பாலானோர் கேட்பது ' Unmarried ' பெண்களைத்தான் . இவனுங்க அழுகி நாத்தமெடுத்துப் போயி இருப்பானுங்களாம். ஆனா இந்த முகரைகளுக்கு கை படாத ரோசா தான் வேணுமாம்.
எனக்கு தெரிந்த ஒரு கைம்பெண்ணை ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டார். நியாயம் கேட்க போனவரிடம் அந்த உத்தமன் சொன்னது "நீ ஆல்ரெடி எல்லாம் பாத்தவ தானே ... ஏதோ கன்னி பொண்ணு மாதிரி பொலம்புற ?
இத்தகைய நிலையில் இருக்கும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்து கொள்ள விரும்பும் இவர்கள் திருமணம் செய்து கொள்ள மட்டும் துணியாத காரணம் சமூகம் இவர்களை எப்படி நடத்த போகிறது என்கிற அச்சத்தினால் மட்டுமே. . உடல் ரீதியாக எந்த வேறுபாடும் இல்லா விட்டாலும் , சமூக பார்வைக்கு மட்டுந்தான் இந்த 'Virgin' 'Experience' எல்லாம் . இது ஒரு சமுக குறியீடு .
திரைப் படங்களில் கூட ஒரு பெண்ணுக்கு மறுமணம் ஆக வேண்டுமானால் ஒன்று திருமணம் ஆன இரண்டு மணி நேரத்திலேயோ அல்லது முதலிரவு முடியும் முன்னமே கணவன் இறந்திருக்க வேண்டும் . இல்லையெனில் தாம்பத்திய வாழ்வு நடக்காமலேயே கணவன் அவளை விட்டு சென்றிக்க வேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே ஹீரோ அவளை திருமணம் செய்து கொள்வார் .
இத்தைகைய சூழல்களால் மறுமணம் என்னும் வாழ்க்கைக்குள் நுழைய முடியாத சில பெண்கள் அதற்கு வெளியே ஒரு துணையை ஏற்படுத்திக் கொண்டால் அவர்களை இந்த நிலைக்கு தள்ளிய சமூகமே அவர்கள் மீது 'கள்ளக்காதல் ' என்கிற வார்த்தை பிரயோகத்தை நிகழ்த்துகிறது . இது பெண்கள் மீது நடக்கும் மிக பெரிய வன்முறை - Passive Violence .
யார் பேச்சை கேட்டு ரகுவரன் கதாபாத்திரம் அவன் மனைவியை கொடுமை செய்ததோ அந்த மீமை ஆதாரமாக வைத்து அத்தகைய சந்தேகங்கள் இன்னொரு ஆணுக்கும் அவன் மனைவி மேல் வரலாம் , அறிவியல் ரீதியாக அந்த மீமில் வந்த விஷயங்கள் தவறென்றாலும் கூட .
இங்கு ஆண்கள் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண் கன்னியா , முன்னனுபவம்
உள்ளவளா என்பதை அந்த பெண் சொன்னால்தானே ஒழிய அவளின் உடல் எந்த காலத்திலும் காட்டி கொடுக்காது . இயற்கை அவர்களை அப்படித்தான் படைத்திருக்கிறது . தாம்பத்தியம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டியது . பெண்கள் எந்த நம்பிக்கையோடு தாம்பத்யத்திற்குள் நுழைகிறார்களோ அத்தகைய நம்பிக்கை ஆண்களுக்கும் தேவை .
இரண்டாவது , வாழ்க்கை துணை என்பது வெறும் 55 கிலோ சதை அல்ல . வாழ்க்கை துணை என்பது மனம் , குணம் , உணர்ச்சிகள் எல்லாம் சேர்ந்த ஒரு உயிர் . வெறும் Sexual Status - பாலியல் தகுதியை வைத்து ஒருவரை திருமணம் செய்வது நாம் அவரை வெறும் சதை பிண்டமாக மட்டுமே பார்க்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது .
பெண்களை இழிவுபடுத்தும் ஒரு சமுதாய பார்வையை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு கருத்தையும் , பிரச்சாரத்தையும் எந்த கலை வடிவில் கொடுத்தாலும் அதை பெண்கள் எதிர்த்துக் கொண்டே தான் இருப்பார்கள் . அதை பார்த்து சிரித்து விட்டு போக அவர்கள் மூளை இல்லா முட்டாள்கள் அல்ல .
பெண்கள் அதிபுத்திசாலிகள்.
( மறுபதிவு - சம்யுக்தாவின் டைரிக் குறிப்பிலிருந்து. )
May be an image of 1 person
All reactions:
You, Elumalaiponnusami, தேடல் விரும்பி and 2.1K others
177
387
Like
Comment
Send
Share
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook


Comments

Popular posts from this blog

மார்க்சின் வார்த்தைகளை பிழைப்புவாத கண்ணோட்டத்தில்

இன்றைய விவாதம்