மார்க்சின் வார்த்தைகளை பிழைப்புவாத கண்ணோட்டத்தில்
தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். பிரச்சினை என்னவென்றால் அதை மாற்றியமைப்பதுதான். -கார்ல் மார்க்ஸ். மார்க்சியத்தை அதன் அடிப்படைச் சாராம்சத்தை மதரீதியிலான பாணியில் திறந்து போடுவது. அதற்கேற்ப மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்தியல்களை திரித்து முன்வைத்து மார்க்சியத்தை மதமாக சித்தரிப்பது. அதன் பின் மார்க்சியம் மதமாக இறுக்க வடிவில் உள்ளது, அதை திறந்த வாசிப்புக்கு உட்படுத்த வேண்டுமென்று வியாக்கியானம் செய்வது. மார்க்சின் வார்த்தைகளை பிழைப்புவாத கல்வித்துறை மேஜையில் வைத்து ஆபத்தல்லாத கருத்துகள் என்று அறுவைச் சிகிச்சை செய்வது. மார்க்சின் இதயத்தை மனிதவியலாகவும் மூளையை பொருளாதார நிர்ணயவாதமாகவும் மாற்றுவது. இளம் மார்க்ஸ் முதிய மார்க்ஸ் என்று பேதம் பிரித்து தங்களை முழுமார்க்சாகக் கருதிக்கொண்டு மார்க்ஸ் சமூகத்தை குறித்து சொன்னதையெல்லாம் நிராகரித்து தங்களை அவ்விடத்தில் பொருத்திக் கொள்வது. (கோமாளியாகக் காட்சியாளிப்பது அதுவும் அறிவுத்துறை கோமாளியாகக் காட்சியளிப்பது அவப்புகழ் பெற்றாவது அறிவுஜீவி என்ற அடையாளத்தைப் பெறுவது) மார்க்சியத்தின் செயலூக்கமான தத்துவத்தை வெறுமனே வாசிக்கவும் எழுதவும...