இன்றைய விவாதம்
Ravindran is with Vchinnadurai Durai and 19 others.
முரண்பாடு அனைத்தையும் தழுவியது. ஒரு அமைப்பில் குறை நிறை இரண்டும் இருக்கும். ஆனால் ஒரு அமைப்பின் மீது வெறுப்பு கொண்டு அதனிடத்தில் குறை மட்டுமே உள்ளது என்று வாதிடுவது நமது குறையை அறிந்துகொண்டு களையப் பயன்படாது. மேலும் நமது கடந்தகால சிறப்புத் தன்மையை மேலும் வளர்க்க வேண்டும் என்பதை மறுப்பதாகும். மேலும் குறைகளை களைவதற்கான வழிமுறைகளையும் நாம் சொல்ல வேண்டும். அதுதான் நாம் படிப்பினை பெற்று வளர்வதற்கு பயன்படும் விமர்சன முறையாகும். மேலும் தவறு என்று தெரியும் போது கோப்ப்படுவது அவசியமே ஆகும். அவ்வாறு கோப்ப்படாமல் இருப்பது குட்டிமுதலாளித்துவ சமரசமே ஆகும். தாராளியம் பற்றிய மாவோவின் கட்டுரையைப் படியுங்கள் புரியும். தவறுகளை எதிர்த்துக் கோபம் கொண்டு போராடாமல் இருப்பது தாராளியம் என்கிறார் மாவோ. இங்கு யாரும் மார்க்சிய லெனினியப் பார்வையில் சிறந்த கட்சியை உருவாக்கவில்லை என்றால் நமது கடந்தகால வரலாற்றில் நமது சிறப்புப் பணியையும் தவறுகளையும் பகுத்து ஆராய வேண்டும். ஆனால் இங்கு சிலர் எம்எல் கட்சி செய்ததெல்லாம் தவறு என்று வாதிடுவதன் மூலம் வலது சந்தர்ப்பவாத திருத்தல்வாதத்துக்கு ஒரு சரியான அடி கொடுத்தது எம்எல் கட்சியாகும் என்பதை மறைக்கிறார்கள். மாணவர்களையும் இளைஞர்களையும் திரட்டி கல்கத்தா நகரத்தையே அதிர வைத்தது எம்எல் கட்சி, கெரோ என்ற போராட்ட வடிவத்தை அறிமுகப் படுத்தியது எம்எல் கட்சி, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் பாதுகாப்பிற்காகப் போராடி பல உயிர் தியாகம் செய்த்து எம்எல் கட்சி. இந்தியாவில் மக்களுக்காகப் போராடி உயிர் தியாகம் செய்த கட்சிகளிலேயே முதன்மையான கட்சி எம்எல் கட்சி. அது போன்று தியாகிகள் அடங்கிய கட்சியை இப்போது எங்குமே பார்க்க முடியவில்லை. தியாகத்துக்கு முன்உதாரணம் எம்எல் கட்சி. போர்க்குணமிக்கப் போராட்டத்துக்கு முன்உதாரணம் எம்எல் கட்சி. இதுபோன்ற சிறப்புத் தன்மை கொண்டதுதான் எம்எல் கட்சி இதனை மூடிமறைத்துவிட்டு நக்சல்பாரிகளிடம் தவறுகள் மட்டுமே உள்ளது என்று வாதிடுபவர்களைப் பார்த்து நக்சல்பாரிகள் தவறானவர்கள் என்றால் சரியானவர்கள் யார் என்று கேள்வி எழுப்புவதில் என்ன தவறு இருக்கிறது.
Comments
Post a Comment