Posts

நானும் இயக்கத்தில்

  எனது கட்சியில் அனுபவம் ம.ஜ.இ.காவும் நானும் என் பள்ளி நாட்களில் தின செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் ஆசிரியர் தூண்டுவார்,அதன் காரணமாக பள்ளிக்கு அருகாமையில் இருந்த டீ கடைக்கு போய் பத்திரிக்கை வாசிக்க பழக்க படுத்தி கொண்டேன், அங்கேதான் என் அரசியல் பயிலகமாக இருந்தது. அங்கு இரட்டை குவளை முறை ஒழிந்து நக்சல்பாரிகளின் செய்திகளை தனியே ஒரு அட்டையில் ஒட்டும் பணி என்னை ஈர்த்தது, தின நிகழ்வுகளோ அல்லது அரசின் கொடுமைகளை நக்சல்பாரி புரட்சியாளர்களின் மீதான தாக்குதல் மேலும் நக்சல்பாரி புரட்சியாளர்களின் கையில் எழுதபட்ட பிரதிகளையும் அங்கே காண முடியும், பின்னர் அரசு படைகளால் ஆங்காங்கே பல தோழர்கள் கொல்லபட்டதை அங்கே தனியாக எடுத்து ஒட்டி வைப்பார், அவர்களின்...

மார்க்சின் வார்த்தைகளை பிழைப்புவாத கண்ணோட்டத்தில்

  தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். பிரச்சினை என்னவென்றால் அதை மாற்றியமைப்பதுதான். -கார்ல் மார்க்ஸ். மார்க்சியத்தை அதன் அடிப்படைச் சாராம்சத்தை மதரீதியிலான பாணியில் திறந்து போடுவது. அதற்கேற்ப மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்தியல்களை திரித்து முன்வைத்து மார்க்சியத்தை மதமாக சித்தரிப்பது. அதன் பின் மார்க்சியம் மதமாக இறுக்க வடிவில் உள்ளது, அதை திறந்த வாசிப்புக்கு உட்படுத்த வேண்டுமென்று வியாக்கியானம் செய்வது. மார்க்சின் வார்த்தைகளை பிழைப்புவாத கல்வித்துறை மேஜையில் வைத்து ஆபத்தல்லாத கருத்துகள் என்று அறுவைச் சிகிச்சை செய்வது. மார்க்சின் இதயத்தை மனிதவியலாகவும் மூளையை பொருளாதார நிர்ணயவாதமாகவும் மாற்றுவது. இளம் மார்க்ஸ் முதிய மார்க்ஸ் என்று பேதம் பிரித்து தங்களை முழுமார்க்சாகக் கருதிக்கொண்டு மார்க்ஸ் சமூகத்தை குறித்து சொன்னதையெல்லாம் நிராகரித்து தங்களை அவ்விடத்தில் பொருத்திக் கொள்வது. (கோமாளியாகக் காட்சியாளிப்பது அதுவும் அறிவுத்துறை கோமாளியாகக் காட்சியளிப்பது அவப்புகழ் பெற்றாவது அறிவுஜீவி என்ற அடையாளத்தைப் பெறுவது) மார்க்சியத்தின் செயலூக்கமான தத்துவத்தை வெறுமனே வாசிக்கவும் எழுதவும...

பகத்சிங்

Image
  முன்னுரை பகத்சிங்!  லெனினியமும் ரசியப் புரட்சியும் பிரசவித்த மகத்தான புரட்சியாளன்! இந்தியப் புரட்சிகர வானில் உதித்த துருவ நட்சத்திரம்!  இளம் வயதிலேயே தேச விடுதலைக்கு தன் உயிரை ஒப்புக்கொடுத்த ஒப்பற்ற தியாகி!  பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஓநாய்களை அலறவிட்ட மாவீரன்!  எல்லாவற்றிற்கும் மேலாக அவனொரு சிறந்த மார்க்சிய - லெனினியவாதி.  ஆம்! பிரிட்டிஷ் காலனியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் சித்தரித்ததைப் போல பகத்சிங் பயங்கரவாதியோ, உணர்ச்சிவசப்பட்ட கலகக்காரனோ அல்ல. அவர் மார்க்சிய - லெனினியத்தை ஆழமாக கற்றுத் தேர்ந்த அசலான புரட்சியாளர் என்பது அவரது கட்டுரைகளை வாசிக்கும் எவரும் அறியலாம்.  இந்தியப் புரட்சிக்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்த பகத்சிங்கின் எழுத்துகளை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும். அதன் துவக்கமாக அவரது கட்டுரைகளில் ஒரு சிலவற்றை தொகுத்து அவரது நினைவு தினத்தன்று வெளியிடுகிறோம்.  மோடி கும்பலின் பாசிச காட்டாட்சியும் அமெரிக்காவின் புதிய காலனியமும் நாட்டை அழித்துவரும் இந்த சூழலானது பகத்சிங் வழியிலான விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை ஆழமாக உணர்த்துகிறது....